18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்

பூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்

எழுதியவர்: mohan December 16, 2019, 5:50 pm

பூலாங்குளம் ஊராட்சியில் சுகாதார கேட்டுடன் காட்சியளிக்கும் சாலையில் விரைந்து தூய்மை பணியை மேற்கொள்ளுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சியில் பூலாங்குளத்திலிருந்து இராமநாதபுரம் (மேலக்காட்டூர் ) , ஆண்டிபட்டி செல்லும் சாலையோரம் புதிய ஊராட்சி அலுவலகம் நியாய விலை கடை உள்ளது. இதன் கீழ் புறம் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சுவர் உயரமாக உள்ளதால் அதன் கீழ் புறம் தேங்கியுள்ள தண்ணீர் கழிவுநீராக ஆகிவிட்டது.

இந்த கழிவுநீரில் மிக அதிக அளவில் கொசுக்கள் காணப்படுகிறது. மேலும் அதன் அருகே குப்பைகள் அதிகம் கிடந்து சுகாதார சீர்கேட்டுடன் அந்த இடம் காட்சியளிக்கிறது.மேலும் இப்பகுதியில் டெங்கு,மலேரியா போன்ற நோய் பரவும் முன்பு , சுகாதாரத்துறை நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும் இதை உடனடியாக சுத்தம் செய்து நோய் பரவுவதை தடுக்குமாறு இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!