18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து

மதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து

எழுதியவர்: mohan December 16, 2019, 3:39 pm

மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் (ஹெல்மெட் அணிந்து இருந்தார்).  இவர் விளாச்சேரி முனியாண்டி புரத்தை சேர்ந்தவர். இருசக்கர வாகனத்தில் கள வாசலில் இருந்து பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அவர் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அவர் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்..பின் பொதுமக்கள் காவல்துறைக்கும் மற்றும் 108 வாகனத்திற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த 108 வாகனம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர் .இந்த விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!