18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

எழுதியவர்: mohan December 16, 2019, 2:28 pm

கடந்த 14.12.2019 தேதி T.வாடிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் ரூபாய்.3,50,000/- ஐ SBI மற்றும் IOB வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டதாகவும் மேலும் போலியான வேலை நியமன கடிதம் தனக்கு தபாலில் வந்ததாகவும் எனவே தன்னை ஏமாற்றி மோசடி செய்த நாகஜோதி மீது நடவடிக்கை எடுக்கும்படி தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல்  பண மோசடி வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கை காவல் ஆய்வாளர் நாகராஜன்  புலன்விசாரணை மேற்கொண்டு நாகஜோதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.

இது போன்று யாராவது வேலை வாங்கி தருவதாக கூறினால் உடனடியாக மதுரை மாநகர வாட்ஸ் அப் முறையீட்டு எண்ணுக்கு (83000-21100) உடனடியாக தகவல் தெரிவிக்கவும் மேலும் இனிமேல் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!