மதுரையை அடுத்த நாராயணபுரம் பேங்க் காலனி அருகே உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இங்கு கடையை அடைத்து சென்ற நிலையில் சுமார் 11.30 மணி அளவில் புகை வர தொடங்கியது. புகை வருவதைக் கண்ட பொதுமக்கள் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ மளமளவென எரிய தொடங்கியது. பின் மதுரை தெப்பகுளம் உள்ளிட்ட மதுரையிலுள்ள தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வரவேற்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைக்கப்பட்டது. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என தகவல் வெளியானது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பெற்றிருக்கலாம் என தகவல் தெரிய வருகிறது .இது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.