மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர்
வீடுகளுக்கு மினரல் வாட்டர் கேன் சப்ளை செய்து வருகிறார்.தன் ஓய்வு நேரங்களில் விதை பந்துகளை தூவுவது, மற்றும் பனை விதைகளை சேகரித்து கண்மாய் ஓரங்களில் விதைக்கும் பணிகளில் ஈடுபடுகிறார். மேலும் புத்தகங்களை வாங்கி அதை நூலகங்களுக்கு தானம் செய்யும் பணியையும் சிறப்பாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் நற்பணிகளுக்கு இவரின் குழந்தைகளும் உதவி செய்துவருகிறார்கள்.நேற்று மதுரை பாண்டிகோவில் முதல் – மேலூர் வரை நான்குவழிச்சாலையில் தன் குழந்தைகளுடன் விதைப்பந்து தூவும் சிறப்பான பணியை மக்கள் தொண்டன் அசோக்குமார் மேற்கொண்டார்.இவர் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் தன் குழந்தைகளுடன் விதைப்பந்துகளை தூவும் பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சாலையோரங்களில் விதை பந்துகளை தூவும் சிறப்பான பணியை செய்து வரும் மதுரை இளைஞர்
எழுதியவர்: mohan December 16, 2019, 10:31 am




You must be logged in to post a comment.