17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்

காவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan December 16, 2019, 10:03 am

மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு பயிற்சியினர் மற்றும் மதுரை சமூகவியல் துறையினருடன் இணைந்து  மதுரை மாநகர் கிரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக இலவச முழு உடல் பரிசோதனையும் மற்றும் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக இலவச கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தலைமையிடம் பாஸ்கரன் , அண்ணாநகர் சரகம் (ச&ஒ) உதவி ஆணையர் .லில்லி கிரேஸ்  சமூகவியல் துறை தலைவர் மீனாகுமாரி மற்றும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இந்த பரிசோதனை முகாமில் 56 காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!