17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீர் நீருடன் சாக்கடை நீா் கலப்பதை சரிசெய்த நகராட்சி ஊழியர்கள்.

குடிநீர் நீருடன் சாக்கடை நீா் கலப்பதை சரிசெய்த நகராட்சி ஊழியர்கள்.

எழுதியவர்: mohan December 15, 2019, 10:27 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாடார் புது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து சாக்கடை நீர் கலந்ததால், வீடுகளிலும் குடி நீருடன் சாக்கடைநீரும் வந்ததை தொடர்ந்து உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் சாக்கடை நீர் கலந்து குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகாா் கூறினர்.

இதைதொடர்ந்து நகராட்சி ஆனையாளர் அழகேஸ்வரி உத்தரவின்படி சுகாதார துறை அதிகாரிகள் அகமது கபீர், சரவண பிரபு ஆகியோரின் அறிவுரையின் படி நகராட்சி ஊழியர்கள் விரைவாக வந்து சாக்கடை நீரும் குடிநீரும் கலந்து வரும் இடத்தில் சென்று சாக்கடை நீரை தனியாகவும் ,குடிநீர் பைப்பையும் தனியாகவும் சரி செய்தனர். , நாடார் புதுத்தெருவில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த சில மணிநேரத்திலேயே நகராட்சி ஊழியர்கள் வந்து சரி செய்ததை தொடர்ந்து பொதுமக்கள் நகராட்சி ஊழியர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!