தமிழ்நாடு கிராம வங்கி சாயல்குடி கிளை சார்பில் 22 களஞ்சிய சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56 லட்சம் கடன் வழங்கப்பட்டது. கந்துவட்டி முறை ஒழிப்பு, பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இக் கடன் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி சாயல்குடி மேலாளர் நவீன் பிரசன்னா முன்னிலை வகித்தார். நெய்தல் வட்டார களஞ்சிய தலைவி பெத்தனாட்சி வரவேற்றார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜன்,நெய்தல் வட்டார களஞ்சியம்,மண்டல பொறுப்பாளர் காளீஸ்வரி, புதுகை வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார்,தமிழ்நாடு கிராம வங்கி சாயல்குடி கிளை பணியாளர்கள், நெய்தல் வட்டார களஞ்சிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.வட்டார பொருளாளர் அபிராமி நன்றி கூறினார்.
சாயல்குடியில் மகளிர் சுய குழுக்களுக்கு ரூ.56 லட்சம் கடனுதவி
எழுதியவர்: mohan December 14, 2019, 4:15 pm



You must be logged in to post a comment.