18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் கோயில் யானை புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டது

ராமேஸ்வரம் கோயில் யானை புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டது

எழுதியவர்: mohan December 14, 2019, 2:56 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கப்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் ஒவ்வொரு ஆண்டும் டிச.3வது தொடங்கி 48 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான முகாமில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை 17 வயதான 3,700 உடல் பருமன் கொண்ட ராமலட்சுமி 8வது முறையாக பங்கேற்க உள்ளது. இதனையொட்டி, ராமநாதசுவாமி சன்னதியில் தலைமை குருக்கள் ஸ்ரீராம தலைமையில் இன்று அதிகாலை கஜபூஜை நடந்தது. இதையடுத்து ராமலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு மலர் மாலை, அங்கவஸ்த்திரம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தல் படி, உதவி ஆணையர் ஜெயா தலைமையில் லாரியில் ராமலட்சுமி, பாகன் ஏற்றப்பட்டு பாகன் ராமு உடன் வழியனுப்பி வைத்தனர். கோயில் கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கர் அண்ணாதுரை மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!