மதுரை அரசு மருத்துவமனையில் காலை மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரசவ வார்டு பகுதியில் செருப்பு அணிந்தபடி அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளனர். இது குறித்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுத்த போது
நோயாளியின் உறவினர்கள் பெண் தான் ஓபிஎஸ்சின் உறவினர் என கூறி மருத்துவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய நிலையில் பெண் மருத்துவர் காயமடைந்தார். இதனையடுத்து காவல்துறையினிருக்கு அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும், சம்பவத்தின் போது அலட்சியமாக இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மதியம் 12.30மணிக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்.
எழுதியவர்: mohan December 14, 2019, 1:04 pm




You must be logged in to post a comment.