இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சித்தார்கோட்டை கிளையின் 40 ஆம் ஆண்டு துவக்க விழா சித்தார்கோட்டை கிளையில் நடைபெற்றது. சித்தார்கோட்டை ஜமாத் தலைவர் ஜனாப் எம். சாகுல் ஹமீது கனி தலைமை தாங்கினார். வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குனர் ப.மு. முருகேசன் முன்னிலை வகித்தார். கடந்த கல்வியாண்டில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியருக்கு கேடயம் வழங்கப்பட்டது. சித்தார்கோட்டையைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வங்கி கிளை காசாளர் ஆர்.முத்து சுதா வரவேற்றார். வங்கி பொது மேலாளர் ஜி.விநாயகமூர்த்தி இட்டுவைப்புதாரர்களுக்கு பத்திரம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கினார். உதவி பொது மேலாளர் கே. பாலசுப்ரமணியன் வங்கியில் வழங்கப்படும் வீட்டுக் கடன் வீட்டு அடமான கடன் குறித்து பேசினார். ஜமாத் செயலர் பி. சாகுல் ஹமீது, முஹமதியா பள்ளி தாளாளர் ஏ. அகமது கபீர், வாளூர் ஜமாஅத் தலைவர் துல்கிப், முகமதியா பள்ளி புரவலர் எஸ்.டி. ஷாஜகான், கள மேலாளர் சுரேஷ், வளர்ச்சி திட்ட பிரிவு மேலாளர் ஆனந்த பாண்டியன் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் எஸ்.ராஜன் நன்றி கூறினார்.
சித்தார்கோட்டை கூட்டுறவு வங்கி 40 ஆம் ஆண்டு தொடக்க விழா
எழுதியவர்: mohan December 14, 2019, 10:14 am




You must be logged in to post a comment.