17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குருசடை தீவில் நூறு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு

குருசடை தீவில் நூறு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு

எழுதியவர்: mohan December 14, 2019, 10:03 am

இராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மண்டபம் மண்டலம் சார்பில் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மை பணி நடந்தது.கடற்கரை தூய்மை பணியை மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் துவங்கி வைத்தார்.

மண்டபம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், மண்டபம் வனச்சரக பணியாளர்கள் பங்கேற்றனர். குருசடை தீவு பகுதியில் கடற்கரை தூய்மை பணி மேற்கொண்டனர். தீவு மணற்பரப்பில் பரவிக்கிடந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!