18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான கணிதப் பயிற்சி மற்றும் திறமை தேடல் நிகழ்ச்சி..

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான கணிதப் பயிற்சி மற்றும் திறமை தேடல் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் December 13, 2019, 7:26 pm

தாசீம்பவீ  அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணிதத்துறையும், MTTS TRUST,  ஹைதராபாத்,  தெலுங்கானாவும் இணைந்து டிசம்பர் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஆறுநாட்கள் தேசிய அளவிலான கணிதப் பயிற்சி மற்றும் திறமை தேடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் S.சுமையா தலைமை உரையாற்றி துவக்கி வைத்தார். முனைவர் R. புனிதா, துறைத்தலைவர், கணிதத்துறை அவர்கள் வரவேற்று பேசினார். துணை முதல்வர்முனைவர் AEGC ரஜினி, துணைமுதல்வர்சு லைஹா ஷகீல், கலைமுதன்மையர் முனைவர் A.ஜாஸ்மின்,  அறிவியல் முதன்மையர் S பன்பரசி பாத்திமா முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கணிதத்துறை வல்லுநர்கள் முனைவர் S சோமசுந்தரம்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,  முனைவர்P.S. ஸ்ரீனிவாசன், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராபப் ள்ளி மற்றும் முனைவர் A.சந்திரசேகரன், மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் பங்கேற்று சிறபபு உரையாற்றினார்கள்.
இதில் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா,  மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் கணிதத் துறையைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர்.. இறுதியாக திருமதி. M.ரெஜினா, உதவிப் பேராசிரியர் கணிதத்துறை அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!