18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ஜக சார்பில் சந்திரசேகர் மனுத்தாக்கல் செய்தார்.

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ஜக சார்பில் சந்திரசேகர் மனுத்தாக்கல் செய்தார்.

எழுதியவர்: mohan December 13, 2019, 2:36 pm

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனைத்து பகுதிகளிலும் பலர் ஆர்வத்துடன் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு டிசம்பர் 30ம் தேதி இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலர் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் உசிலம்பட்டி ஊராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் சந்திரசேகர் (எ) சந்திர மோடி உள்பட பலர் மனுத்தாக்கல் செய்தனர். உசிலம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட வியாழக்கிழமை 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!