இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லீம் சங்கத்தின் நிர்வாகத்தில் இயங்கும் ஹமீதியா தொடக்க பள்ளி வளாகத்தில் சிறிய காடு அமைக்கும் முயற்சியாக 11/12/2019 அன்று மாலை ஹமீதியா தொடக்கப்பள்ளி அலுமினி அஸோஸியேஷன் நிர்வாகிகள் அப்பள்ளி வளாகத்தில் மியவாக்கி முறையில் காடு அமைப்பதற்கு மரச்செடிகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹமீதியா தொடக்கப்பள்ளியின் தாளாளர் இலியாஸ், தலைமையாசிரியர் ஹமீது நிஷா, இன்ஜினீர் கபீர், பீர் முஹம்மது மற்றும் hpsaa அலுமினி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
மேலும் இந்த மியவாக்கி காடு உருவாக்க குறித்த நேரத்திற்குள்ளேயே இதனை செயலமைத்த அபுல்ஹுசைன் மற்றும் அதன் அணியினர என்பது குறிப்பிடதக்கது.
மியவாக்கி காடு என்றால் என்ன?
ஜப்பானிய தாவரவியலாளர் மற்றும் தாவர சூழலியல் நிபுணர் அகிரா மியவாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் இந்த மியவாக்கி காடு.
மியவாக்கி முறையில் மரங்களை வைத்து காடு உருவாக்குவது மற்ற மரங்களை வைத்து காடு உருவாக்குவத்தை விட மிக சுலபமானது. சுமார் 1000 சதுரடி இடமிருந்தால் போதும் இந்த மியவாக்கி காடு அமைத்துவிடலாம்
மற்ற மரச்செடிகள் 10 வருடம் வளர்ச்சியடைந்து பெரியமரமாகும். ஆனால் மியவாக்கி முறையில் செடிகள் 3 வருடத்தில் வளர்ச்சியடைந்து மரமாகும். மியவாக்கி மரவேர்கள் நிலத்தடி நீரை சேமித்து எப்போது ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். மேலும் மரத்தில் இருந்து விழும் இலைகளை அதற்கு உரமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மியவாக்கி மரக்காட்டின் மூலம் சுற்றுப்புறசூழல் மாசடையாமல் இருக்கும் மேலும் மழை பெறவும் வழிவகுக்கும். இன்னும் பற்பல நன்மைகள் உள்ளது.













You must be logged in to post a comment.