நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பாரதியார் சிலை திறப்பு விழா,பன்னாட்டு கருத்தரங்கம்,நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மைதிலி தலைமையில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா முன்னிலையில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் துணைவேந்தர் வேதேகி விஜயகுமார் பாரதியார் சிலையை திறந்து வைத்தார். கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மீனா அவர்கள் கல்வெட்டினைத் திறந்து வைத்தார். தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் துணை வேந்தர் வேதேகி விஜயகுமார் தலைமை வகித்தார்.பொதிதைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர் மைதிலி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆய்வுக் கோவையினை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் துணை வேந்தர் வெளியிட்டார்.தொடர்ந்து முனைவர் உமாதேவி எழுதிய புறம் கூறும் அறம் என்ற நூலும், முனைவர் வைடூரியம்மாள் எழுதிய காணிகுடியிருப்பு மக்களின் வாழ்வியல் பதிவுகள் எனும் நூல்கள் வெளியிடப்பட்டன.
எழுத்தாளர் நாறும்பூநாதன் நூல் மதிப்புரை வழங்கினார். தொடர்ந்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வாழ்த்துரை வழங்கினர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சுலோசனா, பரமகல்யாணி கல்லூரி பேராசிரியர் முனைவர் குமார் மற்றும் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் துணை வேந்தர் வேதேகி விஜயகுமார் பேருரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் பாரதி சிலை செய்த சிற்பி மைலாடி என்.அய்யப்பன் மற்றும் சிலை அமைக்க பீடம் கட்டித் தந்த மேஸ்திரி சந்திரசேகர் ஆகியோருக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இறுதியில் முனைவர் உமாதேவி நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்







You must be logged in to post a comment.