17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பிஸ்கட் நிறுவன வேனில் தீ விபத்து-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

நெல்லையில் பிஸ்கட் நிறுவன வேனில் தீ விபத்து-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

எழுதியவர்: mohan December 13, 2019, 10:49 am

நாங்குநேரி அருகே பிஸ்கட் ஏற்றிச் சென்ற சரக்கு வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமானது.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து பிஸ்கட் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று, ரூ.2 லட்சம் மதிப்பிலான பிஸ்கட்கள் மற்றும் தின் பண்டங்களை ஏற்றிக்கொண்டு திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தது.ஏர்வாடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். வேன், நாங்குநேரி ரயில்வே கேட் பகுதியை கடந்தபோது  என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியதை கவனித்த ஓட்டுநர், வேனை சாலையோரமாக நிறுத்தி, வேனில் இருந்த ஊழியர்களுடன் இணைந்து ஓட்டுநர் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.ஆனால் அதற்குள் தீ வேன் முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வேனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2லட்சம் மதிப்பிலான பிஸ்கெட்டுகள் மற்றும் தின்பண்டங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!