18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகன ஓட்டிகளை உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளம். உயிர்பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..

இருசக்கர வாகன ஓட்டிகளை உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளம். உயிர்பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..

எழுதியவர்: mohan December 12, 2019, 10:13 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே சுமார் 20 அடி நீளத்திற்கு சுமார் முக்கால் அடி ஆழத்திற்கும் தனியார் இன்டர்நெட் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியை சரியானபடி மூடாத காரணத்தினாலும் சமீபமாக பெய்த மழையின் காரணத்தினால் மண் அரிப்பு ஏற்பட்டு முக்கால் அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அந்த பள்ளத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கவனிக்காத சில வாகன ஓட்டிகள் அதில் விழுந்து எழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் கைக்குழந்தையுடன் நிலைதடுமாறி விழும் அவ்வளவும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு உயிர் போன பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். பலத்தை சரியாக மூடாத தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலையை சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!