18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டி விற்பனை அங்காடியை சிறைத்துறை துணைத்தலைவர் தொடங்கிவைத்தார்

சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டி விற்பனை அங்காடியை சிறைத்துறை துணைத்தலைவர் தொடங்கிவைத்தார்

எழுதியவர்: mohan December 11, 2019, 7:21 pm

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுடைய வாழ்வாதாரத்தையும், எதிர்கால நலனையும் உயர்த்தும் வகையில் பல்வேறு சிறுதொழில்கள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, உணவு தயாரிப்பு, பூந்தொட்டி தயாரிப்பு, உள்ளிட்ட வேலைக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையால் சிறையில் கைதிகள் ஆர்வத்தோடு உணவு, ஆடை, இனிப்பு, கார வகைகள் மற்றும் பூந்தொட்டி தயாரிப்பு போன்றவற்றை தயார் செய்து சிறைவளாகத்தின் முன்பகுதியில் உள்ள சிறை அங்காடியில் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த அங்காடியில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகள், காலை உணவு, மதிய உணவு மற்றும் கைவினைப்பொருட்கள், பூந்தொட்டிகள் மலிவான விலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் சிறைக்கைதிகளால் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் நாள் ஒன்றுக்கு சிறைக்கைதிகள் விற்பனை  செய்யும் பொருட்களால் 15000 முதல் 20000 வரை பணம் கிடைக்கிறது.மேலும் தற்போது சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் பூந்தொட்டிகள் வெளியில் விற்கப்படுவதை காட்டிலும் மிகக்குறைவான விலையிலேயே விற்கப்படுகிறது.10ரூபாய் தொடங்கி 200 ரூபாயில் வரை பூந்தொட்டிகள் விற்கப்படுவதால் பொதுமக்களும் பூந்தொட்டிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் சிறைக்கைதிகள் தயாரிக்கும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டி விற்பனை அங்காடியை சிறைத்துறை துணைத்தலைவர் பழனி தொடங்கிவைத்தார்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!