17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி அரசு மருத்துவமனை இரத்த பரிசோதனைக் கூடத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்திட TRATDAC கோரிக்கை..

பழனி அரசு மருத்துவமனை இரத்த பரிசோதனைக் கூடத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்திட TRATDAC கோரிக்கை..

எழுதியவர்: mohan December 11, 2019, 7:13 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயல்படும் அரசு மருத்துவமனை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும்.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இவ்வாறு வருகை தரும் பொதுமக்களில் பலருக்கும் இரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.இதற்காக அரசு மருத்துவமனை ஆய்வகத்திற்கு சென்றால் மூன்று படிக்கட்டுகளுடன் மிகவும் உயரமாக கட்டிடம் உள்ளதால் நோயாளிகளும் மாற்றுத்திறனாளிகளும் மிகுந்த சிரமத்தை அனுபவிக்க நேரிடுகிறது.

ஏற்கனவே பல்வேறு நோய்களுடன் நிற்க கூட முடியாத நோயாளிகளை மூன்று படிக்கட்டுகள் ஏறினால்தான் பரிசோதனை செய்ய முடியும் என்பது மிகுந்த வேதனையை தருகிறது.எனவே, உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் செயல்படும் இரத்த பரிசோதனைக்கூட கட்டிடத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர்P. தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!