18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மண்டல பள்ளி அளவில் வினாடி வினா இராமநாதபுரம் பள்ளி மாணாக்கர் மாநில போட்டிக்கு தகுதி

மதுரை மண்டல பள்ளி அளவில் வினாடி வினா இராமநாதபுரம் பள்ளி மாணாக்கர் மாநில போட்டிக்கு தகுதி

எழுதியவர்: mohan December 11, 2019, 7:07 pm

தமிழக பள்ளிக் கல்வி துறை ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் மதுரை மண்டல அளவில் 9, 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.உயர்நிலைப்பள்ளி அளவிலான போட்டியில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அஜய்வர்மா, தனசேகரன், மாணவியர் ஜீவிகா, ஹேமமாலினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மேல்நிலைப்பள்ளி அளவிலான போட்டியில் ஆர் காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி எலைட் பிரிவு மாணவர்கள் ஆதவன், அருண்குமார், மாணவியர் மேனகா, கோகுல திரிஷா ஆகியோர் வென்றனர். மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற இந்த மாணாக்கருக்கு ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி,ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு , பதக்கம் , பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி(இராமநாதபுரம்), பாலதண்டாயுதபாணி (மண்டபம்), முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பால்கண்ணன் (மேல்நிலைப்பள்ளிகள்), செல்வக்குமார் (உயர்நிலைப்பள்ளிகள்), அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, இராமநாதபுரம் கல்வி மாவட்ட பள்ளிகள் துணை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி , சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் விஜயகுமார், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை எலைட் பள்ளி ஆசிரியர் தவராம் குமார் செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!