17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டு அரசு பள்ளி முன்பு கொட்டப்படும் குப்பைகளால் மாணவர்-மாணவியர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

வத்தலக்குண்டு அரசு பள்ளி முன்பு கொட்டப்படும் குப்பைகளால் மாணவர்-மாணவியர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan December 11, 2019, 2:44 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சாலையில் அமைந்திருக்கும் பெத்தானி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகம் பசுமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளியின் அருகாமையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து கொள்வதால் அதன் அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுகளால் உருவாகும் கொசுக்களால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் உருவாகும் அபாயம் உள்ளது இதனால் மாணவ மாணவிகள் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதோடு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!