17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை உரக் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போலீசார் சமரசம்

மதுரை உரக் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போலீசார் சமரசம்

எழுதியவர்: mohan December 11, 2019, 1:20 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பகுதியில் விகேபி நகர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உரக் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில்  மீண்டும் அந்த பணி தொடங்க ஆரம்பிக்கும் முன் திடீர் நகர் காவல்துறை உதவி ஆணையாளர் வேணுகோபால்  மற்றும் எஸ் எஸ் காலனி ஆய்வாளர்  சக்கரவர்த்தி  தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .பொதுமக்களிடம் இது ஒரு மத்திய அரசு திட்டமானது திட்டம். மிக மிக சிறந்த திட்டம் என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர் காவல்துறை அதிகாரிகள். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. பொதுமக்களுக்கு இத்திட்டமானது நன்மையே எனவும் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் கலைந்து சென்றனர். தற்பொழுது மாநகராட்சி அதிகாரிகள் உரக்கிடங்கு அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!