18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு

இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு

எழுதியவர்: mohan December 11, 2019, 11:23 am

இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே விநியோகஸ்தர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் இரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் . வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக் கொண்டபின் இரசீதில் அத்தாட்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகை ஆகும் . வாடிக்கையாளர்கள் இரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் . மேலும் இந்தியன் ஆயில் டிப்ஸ் வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை . எனவே இரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் கோரப்பட்டால் , வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வாடிக்கையாளர் சேவை மையத்தினை காலை 9 . 30 முதல் மாலை 5 . 15 வரை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .

சென்னை : 044 – 24339238 / 24339246 / 9444085646 மதுரை – : 0452 – 2533956 திருச்சி : 0431 – 2740066 கோயம்புத்தூர் : 0422 – 2247396

விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இத புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃபிரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.பொது நலன் கருதி வெளியிடுவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!