18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அழகிரி நகரில் வங்கி மேலாளர் வீட்டில் 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளை-

மதுரை அழகிரி நகரில் வங்கி மேலாளர் வீட்டில் 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளை-

எழுதியவர்: mohan December 11, 2019, 11:09 am

மதுரை அடுத்த கோவலன் நகர் அருகே உள்ள அழகிரி நகர் 2 வது தெருவை சேர்ந்த வங்கி மேலாளர் தனசேகரன். திரு நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றும் இவர் சென்னையில் நடைபெற்ற தனது மகளின் திருமணத்திற்கு சென்று விட்டு  அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!