தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது ஏலம் எடுத்தவரை தவிர யாரும் போட்டியிடுவதில்லை என ஊர்மக்கள் தீர்மானம்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட பனைக்குளம்
ஊராட்சி மன்றத்தில் திருமல்வாடி, வத்திமரத்து அள்ளி, பனைக்குளம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் மொத்தம் 3600 வாக்குகள் உள்ளன.தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பனைக்குளம் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவியை ஏலந்தில் விட அக்கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன் படி இன்று நடைப்பெற்ற ஏலத்தில் 5 க்கும் மேற்பட்டோர் ஏலந்தில் கலந்து கொண்டனர் .அதில் திருமல் வாடி கிராமத்தை சேர்ந்த இமானுவேல் (பெட்ரோல் பங்க் உரிமையாளர்) என்பவர் ரூ.24 இலட்சத்திற்க்கு தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்தார்.அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொள்வதாகவும் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்ட செய்தி அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி அருகே ஊராட்சிமன்ற தலைவர் பதவி ரூ.24 இலட்சத்திற்க்கு ஏலம்
எழுதியவர்: mohan December 11, 2019, 11:04 am




You must be logged in to post a comment.