17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாடுகளால் விபத்து – மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!

மாடுகளால் விபத்து – மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!

எழுதியவர்: Askar December 10, 2019, 11:42 pm

மாடுகளால் விபத்து – மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!

திண்டுக்கல் மாநகராட்சி பேகம்பூரில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்யும் விதமாகவும், உயிர் சேதம் விளைவிக்கும் விதமாகவும் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி SDPI கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும், சுவரொட்டிகள் ஒட்டி கண்டனம் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கையே கையாண்டு வருகிறது. இதனால் இன்று 10.12.2019 மாடுகளால் வாலிபர் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது. எனவே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி சார்பில் வரும் வெள்ளி கிழமை அன்று மாலை 4மணி மாநகராட்சி முன்பு. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட தலைவர் M.H. அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!