17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் மாநிலத் தலைவர் முன்பாகவே தொண்டர்கள் தள்ளு முள்ளு.!

காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் மாநிலத் தலைவர் முன்பாகவே தொண்டர்கள் தள்ளு முள்ளு.!

எழுதியவர்: Askar December 10, 2019, 11:04 pm

திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் முன்பு தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு பரபரப்பு..!

திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டார், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா பேசும்போது சித்தரேவு பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணி பெயரை சொல்லவில்லை இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணி மேடையிலிருந்த அப்துல்கனி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்துல் கனி ராஜாவின் ஆதரவாளர்களுக்கும், பாலசுப்பிரமணி ஆதரவாளர்களுக்கும், இடையே மேடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி முன்னிலையிலேயே அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை என்ன செய்வது என்று தெரியாமல் அழகிரி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.பின்னர் அவர் பேசுகையில் தேவையில்லாமல் பிரச்சினையை எழுப்பி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்தளின் மாவட்ட பதவிகள் பறிக்கப்படும் என மேடையில் பேசினார் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!