18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தேசிய குடியுரிமை மசோதா நகல் எரிப்பு போராட்டம் : 48 பேர் கைது

இராமநாதபுரத்தில் தேசிய குடியுரிமை மசோதா நகல் எரிப்பு போராட்டம் : 48 பேர் கைது

எழுதியவர்: mohan December 10, 2019, 7:20 pm

இந்தியாவில் முஸ்லிம்கள், தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் நடந்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இபுராஹீம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் அஸ்கர் அலி,பைரோஸ், முகமது இஜாக்,சட்டமன்ற தொகுதி தலைவர்கள் அசன் அலி (ராமநாதபுரம்),ஆசாத் (திருவாடானை),பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர், எஸ்ட்டிடியு., மாவட்ட தலைவர் முஸ்தாக், துணை தலைவர் கோரி, மன்சூர், இராமநாதபுரம் நகர் செயற்குழு உறுப்பினர் பரக்கத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!