17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் மின்சார கட்டணம் பல மடங்கு உயர்வு: இராஜசிங்கமங்கலம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் மின்சார கட்டணம் பல மடங்கு உயர்வு: இராஜசிங்கமங்கலம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு

எழுதியவர்: mohan December 10, 2019, 5:15 pm

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியின் பல பகுதிகளில் மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சராசரியாக கடந்த சில மாத கட்டணத்தை விட பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆகையால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்த தவறுகள் மின்சார கட்டணத்தை குறிப்பெடுக்கும் ஊழியர்களால் ஏற்படுகிறது. தவறாக பதிவாகியுள்ள மின்சார கட்டணத்தை திரும்ப பெறக்கோரி பொதுமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மேலும் மாத குறிப்பு எடுக்கும் நபர் மிகவும் கவணக்குறைவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.மாவட்ட உயர் அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு இது போன்ற தவறுகள் இனி நடக்காத வகையில் வழிவகை செய்ய வேண்டும்.கோரிக்கை மனு கொடுக்கும் போது மம்மதுகனி,மதிவாணன்,முகம்மது யூசுப்,அப்பாஸ்,நூருல் அமீன்,ஜின்னாமுகம்மது,ஹிதாயத்துல்லாஜெமின்,பரக்கத்அலி,அமுதவள்ளி,பாசில்,சாகுல்ஹமீது,ஜமுன்அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!