17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி

எழுதியவர்: mohan December 10, 2019, 4:02 pm
இராமநாதபுரம் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினி காந்தின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  ரஜினி மக்கள் மன்றம் இராமநாதபுரம் ஒன்றியம் சார்பாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த் தலைமை வகித்தார்.
ஒன்றிய பொறுப்பாளர் ரஜினி.முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்.காவனூர், மாதவனூர், கலையனூர் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைக்கொட்டு, கருக்கருவால் பேராவூர், தேவிப்பட்டினம் பள்ளி மாணாக்கர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு நோட்டு, கணித சாதன பெடி, டிப்பன் பாக்ஸ் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.  தேவிபட்டினம் உலகம்மாள் கோயில் மீனவ பெண்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.  மாவட்ட இணை செயலாளர் செந்திவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகானந்தம், பேராவூர் கிராம தலைவர் நாகராஜன், கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!