17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாநில, மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

இராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாநில, மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

எழுதியவர்: mohan December 10, 2019, 1:11 pm

அப்துல் கலாம் ஐயா அவர்களின் 88வது பிறந்தநாள் மற்றும் 4ம் ஆண்டு நினைவாக இராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாநில, மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் இன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட யோகசன செயலாளர் காசிநாததுரை தலைமை தாங்கினார்.மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் போஸ், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அப்பாஸ் முகைதீன், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் மயில்வேல்நாதன், மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் கௌரவத்தலைவர் வேல்மயில் முன்னிலை வகித்தனர்.

பல்மருத்துவர் ஷாஜகான், மாவட்ட யோகாசன சங்க துணை செயலாளர் ஸ்ரீதரன் வாழ்த்துரை வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர்களாக ஹெக்டே,மாரிமுத்து, செல்வகுமார், மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக யோகா ஆசிரியர்கள் கருப்பையா, ராமலெட்சுமி, புவனேஸ்வரி, அமுதா செல்வராஜ், கங்கா,சந்துரு, சுகன்யா, விஜயசெல்வி ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!