இராமநாதபுரம் மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு
மனு தாக்கல் இன்று (டிச.9)துவங்கியது.முதல் நாளான இன்று (டிச.9) இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேர்,மண்டபம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 பேர் மனுத்தாக்கல் செய்தனர். திருவாடானை ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், போகலூர் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நயினார் கோயில் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேர், கமுதி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர்,கடலாடி. ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர்மனுத்தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 37 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 52 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் இல்லை.தேர்தல் ஆணைய அரசாணை படி டிச.27 ல் இராமநாதபுரம், மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்,திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்ட தேர்தலும், டிச.30 ல் போகலூர் , பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், கமுதி , கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 52 பேர் மனு
எழுதியவர்: mohan December 9, 2019, 7:42 pm




You must be logged in to post a comment.