தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அண்ணாமலை அள்ளி காப்புக் காட்டில் இருந்து சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இரை தேடி அருகே உள்ள கெட்டூர் கிராமத்திற்க்குள் புகுந்தது இதனை கண்ட கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மலைப்பாம்பை பிடித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு பிக்கிலிகாப்புக் காட்டில் விட்டனர். இக்கிராமத்தில் மலைப்பாம்பு அடிக்கடி ஊருக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு
எழுதியவர்: mohan December 9, 2019, 6:36 pm




You must be logged in to post a comment.