18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தில் சமத்துவ கந்தூரி விழா

இராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தில் சமத்துவ கந்தூரி விழா

எழுதியவர்: mohan December 9, 2019, 5:00 pm

இராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் பள்ளிவாசலில்ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா சமத்துவ திருவிழவாக வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஏராளமானோர் கலந்துகொள்வர்.இந்த ஆண்டுக்கான கந்தூரி திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு உணவு பொட்டலங்கள், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டது. மவ்லீது ஷரீப் ஓதுதல், ஜமாஅத் நிர்வாகிகள் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இஸ்லாமிய மார்க்க சமய சொற்பொழிவு, இஸ்லாமிய இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது. சிறப்பு துவா ஓதப்பட்டு கிராம பொதுமக்களுக்கு உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மலேசியா தொழிலதிபர்கள் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஜமாஅத் தலைவர் எச்.காபத்துல்லா, மலேசியா ஜமாஅத் தலைவர் ஏபிசி.அயூப்கான் மற்றும் நிர்வாகிகள் சிக்கந்தர்அலி, நசுரூதீன், ஹாஜி இலியாஸ், ஜெ.பி.அலிபுல்லா, சகுபர்அலி, சேட், ஹாஜி நசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!