17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஓர் ஆண்டுக்கு மேலாகியும் சேதமடைந்த பாலத்தை சரி செய்யாமல் தொடரும் அவலம்

ஓர் ஆண்டுக்கு மேலாகியும் சேதமடைந்த பாலத்தை சரி செய்யாமல் தொடரும் அவலம்

எழுதியவர்: mohan December 8, 2019, 12:09 pm

அரியலூர் மாவட்டம் , ஒன்றியம் , வட்டம் , செட்டிபாளையம் பஞ்சாயத்து , முனியன் குறிச்சி கிராமத்தில் பிரதான சாலையில் ஒரு பாலம் சேதம் ஏற்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர் வரதராஜன் கூறும் போது இன்று வரை மாவட்ட நிர்வாகம் அந்த பாலம் மாற்றம் சாலையை சீரமைக்க எந்த வித முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை.சாலையிலிருந்து பாலம் பாதி அளவுக்கு இணைப்பை துண்டித்து இருக்கின்றன. மனித உயிர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு அசாதாரண சூழ்நிலை இந்த இடத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.மனித உயிர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு இவற்றை சரி செய்துவிட்டால் மிக நன்றாக இருக்கும்.மாவட்ட நிர்வாகம் , சம்பந்தப்பட்ட துறை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த இந்த சாலையையும், பாலத்தையும் உடனடியாக சீரமைத்து மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதாக மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!