18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்- ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கைது

கடையநல்லூரில் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்- ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கைது

எழுதியவர்: mohan December 8, 2019, 12:02 pm

பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டியும், மீண்டும் அதே இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும், பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனா, சேனா சர்தார் தலைமை தாங்கினார்.மாவட்ட துணைத்தலைவர் ஷேக் ஜிந்தா மதார், மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனார், மாவட்ட துணைச்செயலாளர் இம்ரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒலி, சித்தீக், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசன் கனி, தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது கடையநல்லூர் தொகுதி தலைவர் நைனா முஹம்மது கனி, கடையநல்லூர் நகர தலைவர் யாசர் கான், நகர செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என கண்டன உரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா மாவட்ட தலைவர் திப்பு சுல்தான், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர் தொகுதி செயலாளர் முனுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். தடைமீறியதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!