17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சர்வதேச மாற்று திறனாளிகள் விழா. பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..

சர்வதேச மாற்று திறனாளிகள் விழா. பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..

எழுதியவர்: mohan December 7, 2019, 5:36 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசுகையில், நீங்கள் அனைவரும் மாற்று திறனாளிகளுக்கு உதவ வேண்டும்.மாற்று திறனாளிகள் பல பேர் வாழ்க்கையில் பல எண்ணற்ற சாதனைகளை படைத்து உள்ளனர்.நீங்கள் சிறு வயதிலேயே மாற்று திறனாளிகளை நல்ல எண்ணத்துடன் அணுகி அவர்களுக்கு உதவி செய்து ஊக்கபடுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கருப்பையா,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாணவி சௌமியா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!