17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி அருகே மழையால் பாதித்த மக்களுக்கு அரசு நிவாரணம்

ஏர்வாடி அருகே மழையால் பாதித்த மக்களுக்கு அரசு நிவாரணம்

எழுதியவர்: mohan December 7, 2019, 4:49 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சடைமுனியன் வலசை கிராமத்தில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, வேஷ்டி, சேலை வழங்க அறிவுறுத்தினார். இதன்படி, கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜ் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்களை வழங்கினர். கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ஜலால், மண்டல துணை வட்டாட்சியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் சாரதா, ஏர்வாடி ஊராட்சி செயலாளர் அஜ்மல் கான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!