17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் திமுக சார்பாக தாகம் தீர்க்க நீர் பந்தல்..

கீழக்கரையில் திமுக சார்பாக தாகம் தீர்க்க நீர் பந்தல்..

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2017, 10:47 am

கோடை வெயில் கடந்த வருடத்தை காட்டிலும் மிகவும் உக்கிரமாக உள்ளது. கீழக்கரையில் பல சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைவரும் மக்கள் தாகம் தீர்க்க நீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கி வருகிறார்கள்.

நேற்று (02-05-2017) திமுக கட்சி சார்பாக பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், ரோஸ்மில்க் போன்ற நீர் ஆகாரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி கீழக்கரை திமுக நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் தோழமைக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், மமக மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!