17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் தூக்கு மாட்டி தற்கொலை

திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் தூக்கு மாட்டி தற்கொலை

எழுதியவர்: mohan December 5, 2019, 11:19 am
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேள்ளிகிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை 23 வயது. இவர் கட்டிட தொழிலாளி அதே பகுதியில் ஜெயலட்சுமி என்ற பெண்ணே பார்த்து ராஜேந்திரன் தனது  மகன் ராஜதுரை க்கு திருமணம் செய்து வைக்கிறார். திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. திருமணத்திற்கு  முன்  ராஜதுரை பெங்களூர் தனியார் மருத்துவமனையில் மூன்று வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது மனைவி ஜெயலட்சுமிக்கு தெரியவருகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்திருக்கலாம் என்று பொதுமக்களால் கூறப்படுகிறது. இந்த மனவேதனையில் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் ராஜதுரை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!