17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.

பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.

எழுதியவர்: mohan December 5, 2019, 11:11 am

பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட தக்காளி மார்கெட்டில் தினதோறும் 200டன் அளவிற்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஹள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஹள்ளி, தும்பலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் என தக்காளி மார்கெட் பகுதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் பகுதியாக திகழ்கின்றது.இந்நிலையில் இப்பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர், மழைநீர், அலுகிய தக்காளி, உள்ளிட்டவை ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தி யாகி பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் இந்த கழிவு நீரானது வெளியேறுவதற்கு வழி இல்லாத காரணத்தால் மார்கெட் பகுதிகளிலேயே பல மாதங்களாக தேங்கி நிற்கிறது .இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் விசுவதுடன் கொசு உற்பத்தியாகும் கேந்திரமாகவும் திகழ்கிறது இந்த கழிவு நீரை அப்புறப்படுத்த வலியுறுத்தி பல மாதங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்றுநோய் ஏற்பட்டு உயிர்பலி  ஆவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தலையீட்டு பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!