ஹைதராபாத்தில் சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நடந்த அசம்பாவிதம் மனம் கனக்க செய்தது. அத்தகைய சந்தர்ப்பங்களை கையாளுவது எப்படி? காவல்துறை உதவியை பெறுவது எப்படி என பார்க்கலாம் .
பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 3 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.
இந்த செயலி தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது . நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் .
இந்த செயலியை இலவசமாக பயன்படுத்தலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் .
உங்களது இக்கட்டான சூழ்நிலையில் எண் 100ஐ அழைக்க தயங்க வேண்டாம்.
பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டியது ஒவ்வோரு பெற்றோரின் கடமை.
“நமது மதுரை மாவட்டம் பாதுகாப்பான மாவட்டம்”
என்றும் மக்கள் நலனில்…மதுரை மாவட்ட காவல்துறை
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.