18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முறையான பராமரிப்பு இல்லாததால் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆதார் மைய மேற்கூரை இடிந்து விழுந்தது

முறையான பராமரிப்பு இல்லாததால் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆதார் மைய மேற்கூரை இடிந்து விழுந்தது

எழுதியவர்: mohan December 4, 2019, 2:51 pm

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆவண காப்பகம் அலுவலகம் உள்ளது. இதில் அருகே ஆதார் மையம் சுமார் ஐந்து ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆதார் பதிவு செய்ய வருகின்றனர். இந்த அறையின் மேற்கூரை பகுதி பிளாஸ்டர் ஆப் பாரீசினால் ஆன கூரை அமைக்கப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மாடியில் மழைநீர் தேங்கி நிற்கிறது . குழாய்கள் அடைப்பு இருப்பதால் மழைநீர் வெளியேற வழியின்றி கட்டடத்தின் கூரை மேல் விரிசல்வழியாக அலுவலகத்தில் உள்ள அறைக்குள் தண்ணீர் வடிந்து  குழந்தைகளுக்கான ஆதார் வழங்கும் அலுவலகத்துக்கு வந்தது.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இந்த மழைநீர் பல மாதங்களாக வந்ததால் ஆதார் மையம் மேற்கூரை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சீட் தண்ணீர் பட்டு திடீரென  பல பகுதிகள் இடிந்து விழுந்ததால்  ஆதார் பதிவை ஊழியர்கள் நிறுத்தி பொதுமக்களை வேறு மையத்துக்கு சென்று பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார். மேற்கூரை இடிந்து விழும்போது யாருமில்லை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!