18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் -சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் உள்ள கழிப்பறையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

பேரையூர் -சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் உள்ள கழிப்பறையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan December 4, 2019, 1:09 pm

மதுரை மாவட்டம் பேரையூர் சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடம் கடந்த ஒரு மாதமாக ஒரு நேரம் மட்டும் திறந்து விடுவதாகவும், இந்த கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் நலன் கருதி எப்போதும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கழிப்பறை கட்டிடம் முன்பு குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகள் கழிப்பறையை முழுநேரமும் திறக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!