18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே வறுமையின் கொடூரம்- குடும்பத்தினர்களை கொன்று தானும் தூக்கில் தொங்கிய ஆட்டோ ஓட்டுனர்

தென்காசி அருகே வறுமையின் கொடூரம்- குடும்பத்தினர்களை கொன்று தானும் தூக்கில் தொங்கிய ஆட்டோ ஓட்டுனர்

எழுதியவர்: mohan December 4, 2019, 12:38 pm

தென்காசி மாவட்டம் கட்டளைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(35). இவரது மனைவி இந்துமதி(28). இந்த தம்பதியினருக்கு மித்ரன்(6), மூர்த்தி(2) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநராக தொழில் பார்த்து வந்த கந்தசாமி கடுமையான வறுமையில் சிக்கி தவித்துள்ளார். வறுமை காரணமாக கடந்த சில நாட்களாக கந்தசாமி மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் காலை வெகுநேரமாக கந்தசாமியின் வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது.இதனால் சந்தேகமடைந்த அருகிலுள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கந்தசாமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அவரது மனைவியும் மகன் மித்ரனும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். மற்றொரு மகன் மூர்த்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தான். மூர்த்தியை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கந்தசாமி வீட்டின் சுவரில் ‘எங்கள் சாவுக்கு காரணம் என் வறுமை’ தான் எழுதப்பட்டிருந்தது.குடும்பத்தின் வறுமை தாங்காமல் மனைவி மற்றும் மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற கந்தசாமி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஒரு மகன் மட்டும் உயிர் பிழைத்து ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!