மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவர்களின் போராட்டத்திற்கு
வணிகர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியவுடன் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க பழைய அரசாணையை மாற்றி புதிய அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 58 கிராம கால்வாய் தண்ணீர் திறக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என கூறி உசிலம்பட்டி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் தடையை மீறி தேவர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ், உதயகுமார், உசிலம்பட்டி அமமுக சார்ந்த வழக்கறிஞர்கள் காக்கி ராஜா, பாலச்சந்திரன், உசிலம்பட்டி இளைஞர் அமைப்பு அஜித் பாண்டி, மூவேந்தர் முன்னேற்ற கழக சுதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தடையை மீறி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
எழுதியவர்: mohan December 4, 2019, 12:32 pm




You must be logged in to post a comment.