தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து மதுரை மாவட்டம் தெப்பக்குளம் கழிவு பொருட்களை ஏற்றிவந்த லாரி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஒன்று வந்து இரவு 9மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது லாரியின் பிரேக் ஒன்றோடு ஒன்று உரசியதால் புகை கிளம்பி தீப்பற்ற ஆரம்பித்தது. இதைக்கண்ட ஓட்டுனர் புகை வருவதைக் கண்ட வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். உடனடியாக அருகே உள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க அடுத்த சில வினாடிகளில் விரைந்து வந்த மதுரை தீ தடுப்பு அதிகாரி வெங்கடேசன் குழுவினர் தீயணைப்பு சக்கரத்தின் இடையில் ஏற்பட்ட தீ தண்ணீர் பீச்சி அணைத்தனர். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் துரித நடவடிக்கையால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.