18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் – பாச்சலூர் ரோட்டில் 2 இடத்தில் மண் சரிவு

ஒட்டன்சத்திரம் – பாச்சலூர் ரோட்டில் 2 இடத்தில் மண் சரிவு

எழுதியவர்: mohan December 4, 2019, 10:59 am

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொடர் மழை காரணமாக ஒட்டன்சத்திரம்-பாச்சலுார் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டதை நெடுஞ் சாலைத்துறையினர் சீரமைத்தனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு, கண்ணனுார், பால்கடை, பாச்சலுார், புலிகுத்திக்காடு, பெத்தேல்புரம் உள்ளிட்ட மலைப் பகுதி கிராமங்களுக்கும் மற்றும் கிழக்குசெட்டிபட்டி, கொடைக்கானலுக்கும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 5 வளைவுகள் கொண்ட பகுதியிலும், அதற்கு முன்பும் ரோட்டின் பாதி இடத்தில் மண் சரிந்து கிடந்தது. ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் விழுந்திருந்த மண்ணை அகற்றி சீரமைத்தனர். இந்த சாலை பகுதியில் மண் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!