மதுரையைச் சார்ந்த சக்கரவர்த்தி, த/பெ.தனபால் என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்திருப்பவர் 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூபாய்.4,47,500/- தவறவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 30.11.2019 தேதி மதுரை மாநகர் B3-தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெற்று, வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் கீதா தேவி அவர்கள் CCTV கேமிரா பதிவுகளை சேகரித்து புலன் விசாரணை நடத்தி வந்தார்.
இன்று (03.12.19) பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS முன்னிலையில் அதன் உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். மேற்படி பணம், விலை உயர்ந்த சேலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைத்த பூபாலனை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.